பாலுடன் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வேறுசில நன்மைகளும் கிடைக்கும்.
இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
ஆரஞ்சுப் பழச்சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும். தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும். சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ, வீக்கம் குறையும். கட்டிகளும் ஆறிவிடும்.
ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வர பலன் கிடைக்கும்.