தினமும் நீங்கள் குடிக்கும் தேநீரில் சில துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால் ருசியும் மணமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். மேலும் துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, பருக்கள் போன்ற சரும பிரச்னைகளை போக்கிவிடும். துளசி எண்ணெய்யை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.
துளசியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மற்றும் ஆர்த்திரிட்டிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். துளசியில் தேநீர் தயாரித்து குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
Visits: