டெங்குவை குணப்படுத்த சித்த மருத்துவத்தின் மூலம் கிடைத்துள்ள நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலை சாரும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை விரட்டுவதில் துரிதமாக செயல்படுகின்றன.
நிலவேம்பு வேறு-நிலவேம்பு கசாயம் வேறு. டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகின்ற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் சேர்க்கப்படுவதில்லை அதனுடன் 9 பொருட்கள் சேர்த்து நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது. அதாவது நிலவேம்பு என்கின்ற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய் புடலை, கோரைகிழங்கு, சந்தன சிறாய், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி விட்டு, ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்கவைக்கவேண்டும்.
இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கவேண்டும். இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்திற்குள் குடிக்கவேண்டும். தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. காய்ச்சல் இருப்பவர்கள் காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்கவேண்டும். காய்ச்சல் நிற்கும் வரை குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் வாரம் 3 முறை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
நிலவேம்பு கசாயம் 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள் ஆகும். இந்த கசாயத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது.