பெரும்பாலான இயற்கை மருத்துவ முறைகளில் அதிக அளவு மூலிகைகள், செடி கொடிகளை மருந்துகளாக பயன்படுத்தினாலும் சமயங்களில் விலங்குகளிலிருந்து பெறப்படும் சில பொருட்களும் நோய்களை குணமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே மீன் எண்ணெய் மாத்திரைகளை உடல் நலம் பெறுவதற்கு மருத்துவரின் அறிவுரைப்படி சாப்பிட்டு வரும் வழக்கம் இருக்கிறது.
இந்த மீன் எண்ணெய் என்பது மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்ற மீன்களில் இருந்து மீன் எண்ணெய் பெறப்பட்டாலும், அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன.
அத்தகைய மீன் எண்ணெய் மாத்திரைகளை மருத்துவர்களின் அறிவுரையோடு சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.