தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல் – டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 200 கிராம், சர்க்கரை – 300 கிராம், பால் பவுடர் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 கிராம்.
செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.
இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.