தேவையானவை: கடலைப்பருப்பு – 200 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெல்லம் – 250 கிராம், நெய் – 100 கிராம், வறுத்த முந்திரி – 25 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.