தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு, பச்சரிசி மாவு – 100 கிராம், ஓமம் – 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் – அரை கிலோ.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள் / மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.