தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) – 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – கால் கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.
சீப்பு ரோல்ஸ் | Seepu Seeda Recipe










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post