நேரங்கள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.


நேரங்கள்.


புத்தகங்களுடன் செலவழிக்கும் நேரங்கள்.,
நம்மை வெளிச்சத்திற்கு இட்டுச்செல்லும்.!


நண்பர்களுடன் செலவழிக்கும் நேரங்கள்.,
கவலைகளை நம்மிடமிருந்து விரட்டி விடும்.!


மனைவி / கணவனோடு செலவழிக்கும் நேரங்கள்.,
வாழ்க்கையை வசந்தமாக மாற்றும்.!


குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள்.,
நம்மையும் மழலையாக்கி மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.!


பெற்றோருடன் செலவழிக்கும் நேரங்கள்.,
தெய்வத்துடன் நம்மை சங்கமிக்க வைக்கும்.!


விளையாட்டில் செலவழிக்கும் நேரங்கள்.,
மனதையும் தேகத்தையும் ஒருசேர வலிமையாக்கும்.!


போதையுடன் செலவழிக்கும் நேரங்கள்., ஓசையின்றி நம்மை நரகிற்கு இட்டுச்செல்லும்.!


கற்பித்தலில் செலவழித்த நேரங்கள்.,
வருங்காலத் தலைவர்களை உருவாக்க வைக்கும்.!


உழைப்புடன் செலவழிக்கும் நேரங்கள்.,
வியர்வைக்குப் பரிசாக வெற்றியைத் தந்து உயர்த்திட வைக்கும்.!


சோம்பலுடன் செலவழிக்கும் நேரங்கள்.,
நம்மை வாழ்வின் இருளில் தள்ளிவிடும்.!

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நேரங்கள்.!!

அவரவர் வாழ்வும்,
அவரவர் நேரங்களை செலவழிக்கும் விதங்களில் மாற்றம் உண்டு…!!!

ஆம்

நாம் நமது நேரங்களை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பதில் தான் நமது எதிர்காலம் இருக்கிறது.

ஒளி வீசும் பொழுதுகளில் வெற்றிகள் நிறைந்த இனிமையான வாழ்வும் வசந்தமும் வந்து குவியும் வண்ணமாக நமது நேரம் அமையட்டும்..

எல்லோருக்கும் செல்வமும், நலமும் ஒன்றாக கிடைக்கட்டும்…

Related Posts

Leave a Comment

Translate »