பணம் எண்ணங்கள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நம் வாழ்க்கையில் போதுமான #பணம் இல்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதற்கு காரணம் #கர்மவினையோ ,பிறந்த நேரமோ, #ஏழரைச்சனியோ , #குருபார்வையோ நிச்சயமாக காரணம் ஆக இருக்க மாட்டார்கள் !

ஒரே காரணம் தான் இருக்கிறது ?

தங்களுடைய #எண்ணங்கள் மூலம் பணம் தங்களிடம் வந்து சேர்வதைத் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான்!

காரணம் ஒவ்வொரு எதிர்மறையான எண்ணங்களும் உணர்வுகளும் பணம் உட்பட அனைத்துச் சிறந்த விஷயங்களும் உங்களிடம் வந்து சேருவதைத் தடுத்துக் கொண்டு இருக்கின்றன.

#பிரபஞ்சம் உங்களிடம் இருந்து பணத்தை, செழிப்பை, #மகிழ்ச்சியை தள்ளி வைக்கவில்லை. தற்போது இந்த நொடிப்பொழுதில் உங்கள் பார்வைக்குப் புலப்படாத உலகில் உங்கள் மகிழ்ச்சிக்கு வாழ்க்கைக்கு‌ தேவையான அனைத்தும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களுக்கு தேவையான பணத்தை விட அதிகமான பணம் உங்களிடமே இருக்கிறது என்ற எண்ணத்திற்க்கு உணர்வுக்கு நீங்கள் மாற வேண்டும். இதனால் உங்களுக்கு தேவைப்படும் பணம் உங்களுக்குள் உண்டாகும். உங்கள்‌ எண்ணங்கள் உணர்வுகள் சக்தி வாய்ந்தது அதனால உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த அலைவரிசையில் உங்கள் மனதை வைத்துக் கொண்டால் போதும் உங்களுக்கு தேவையானதை உங்களை நோக்கித் தொடர்ந்து கவர்ந்து இழுத்துக் கொண்டே இருப்பீர்கள்.

இன்று முதலாவது தங்களது எண்ண அலைகளை சீர் தூக்கிப் பாருங்கள் என்ன நடக்கிறது என்று தங்களுக்கே உண்மை புரிய வரும்.

யாரை மதிக்கிறீர்களோ இல்லையோ #காலத்தை மதியுங்கள் காலம் உங்களை ஒரு நாள் கரையும் சேர்க்கும் #கலங்கரை விளக்கம் ஆகவும் மாற்றும்.

காலத்தை #மதிப்போம்…
காலத்தை #காதலிப்போம்…
காலம் நம்மை கட்டி அணைத்துக் கொள்ளும்.

Related Posts

Leave a Comment

Translate »