தேவையானபொருட்கள்:
கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், நெய் – 100 கிராம், பொடித்த சர்க்கரை – 150 கிராம், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.