தேவையானவை: மைதா மாவு – 200 கிராம், பாதாம் துருவல் – 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை – 75 கிராம், கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – அரை கிலோ, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.