பாதாம் மில்க் அல்வா | Badham Halwa Recipe

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையானபொருட்கள்:

பாதாம் பருப்பு – 100 கிராம், பால் – 100 மில்லி, சர்க்கரை – 150 கிராம், பாதாம் எசன்ஸ் – சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் – அரை சிட்டிகை, நெய் – 50 கிராம்.

செய்முறை:

பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் – பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்

குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

Related Posts

Leave a Comment

Translate »