ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் | Special Sweet Mixture

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையானவை: கெட்டி அவல் – 200 கிராம், பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் – தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் – சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்), எண் ணெய் – 250 கிராம், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற… ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.

குறிப்பு: நெய் – சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

Related Posts

Leave a Comment

Translate »