முகப்பரு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பருவ காலத்தில் உடலுறுப்புகள் வேகமாக வளர்ச்சி பெருகின்றன உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன இதனால் கழிவுப் பொருட்கள் நிறைய வெளியேற வேண்டியிருக்கின்றன இந்தக் கழிவுப் பொருட்களில் ஓன்றுதான் முகப்பரு முன் எச்சரிக்கையுடனிருந்தால் முகப்பருக்கள் வராமலே தடுக்கமுடியும் முகம் சுத்தமாக இருக்கவேண்டும் எண்ணெய்ப் பசையே கூடாது எண்ணெய்ப் பசை மயிர்க்காலை அடைத்துக்கொண்டால் கழிவுப் பொருள் எளிதாக வெளியேறுவது தடைப்படும் இதனால்தான் முகப்பரு உண்டாகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதர்க்கு மருந்து :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முகப்பருவிற்குப் புனுகு வாங்கி லேசாகத் தடவிவிட விரைவில் பழுத்து உதிர்ந்துவிடும்
மற்றும் :
ஜீரகம் 35 க்ராம்
கருஞ்ஜீரகம் : 35 க்ராம்
பசுவின் பால் : 100 மி. லிட்டர்
சுத்தப்படுத்திய அம்மியில் இரண்டு ஜீரகத்தையும் பால்விட்டு அரைக்கவும் வெண்ணெய்ப் பதத்தில் வழித்து எடுத்துக் கோப்பையில் பத்திரப்படுத்தவும் அதிகாலையிலும் இரவிலும் இந்த விழுது மருந்தைத்தடவி 45 நிமிஷங்கள் ஊறவேண்டும் பிறகு குளிர்ந்த நீரினால் நன்றாக அலம்பி அழுத்தித் துடைக்கவேண்டும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பருவினால் ஏற்பட்ட தழும்பு நீங்க
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதிமதுரம் : 30 க்ராம்
தாமரைக்கிழங்கு : 30 க்ராம்
அல்லிக்கிழங்கு 30 க்ராம்
அருகம்புல் 30 க்ராம்
வெட்டிவேர் 30 க்ராம்
ஜடாமஞ்சி 30 க்ராம்
மரமஞ்சள் வேர்ப்பட்டை 30 க்ராம்
இவற்றைச் சுத்த நீர் விட்டு அரைத்து சீசாவிலே பத்திரப்படுத்தவும் ஓரு நாள் முழுவதும் மருந்து சீசாவைத் தண்ணீரில் ஊறப் போடவும் அதன் பிறகே எடுத்துப் பூசவேண்டும் குளிர்ந்த நீரினால் அலம்பித் துணியினால் நன்றாகத் துடைக்கவும் தழும்புகள் மறையும்.