உப்பை வைத்து 10 சுலபமான டிப்ஸ்..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பயனுள்ள 10 சமையல் அறை டிப்ஸ் (Kitchen Tips)..!

நமது பொதுநலம் பகுதியில் உப்பை வைத்து 10 பயனுள்ள சமையல் அறை டிப்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.

சிலருக்கு பொதுவாக அவர்களது சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் உப்பை வைத்து 10 பயனுள்ள சமையலறை டிப்ஸ் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

சமையல் அறை குறிப்பு 1:

நாம் தினமும் அதிகமாக பாத்திரங்கள் கழுவுவோம் இதன் காரணமாக வாஷிங் சிங்கிள் அடிக்கடி அடைப்பு ஏற்படும், இந்த அடைப்பை சுத்தம் செய்ய, மிகவும் கஷ்டப்படுவோம். இனி வாஷிங் சிங்கிள் அடைப்பு ஏற்பட்டால் கவலைப்பட தேவையில்லை.

இரவு தூங்குவதற்கு முன் வாஷிங் சிங்கிள் சூடான தண்ணீரை ஊற்றுங்கள், அதன்பிறகு சிறிதளவு உப்பை வாஷிங் சிங்கிள் உள்ள துளைகளுக்குள் போடுங்கள் அவ்வளவுதான், இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள்.

மறுநாள் காலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசவும், அவ்வளவுதான் வாஷிங் சிங்கிள் உள்ள அடைப்புகள் அனைத்தும் வெளியாகிவிடும், அவற்றில் இருக்கும் துர்நாற்றங்களும் நீங்கி. தங்களது வாஷிங் சிங் மிகவும் சுத்தமாக இருக்கும்..!

கேஸ் சிலின்டர் எவ்வளவு அளவு உள்ளது – சுலபமாக தெரிந்துகொள்ளும் சூப்பர் TRICKS

சமையல் அறை குறிப்பு (kitchen tips) 2 :

கோதுமை மாவில் சில சமயங்களில் வண்டுகள் இருக்கும், இந்த வண்டுகள் வராமல் தவிர்த்துக்கொள்ள கோதுமை மாவில், தூள் உப்பு இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி வைத்தால், கோதுமை மாவில் வண்டுகள் வருவதை தவிர்த்துக்கொள்ள முடியும். கோதுமை மாவின் அளவுக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

சமையல் அறை குறிப்புகள் (kitchen tips) 3:

ஆப்பிள் நறுக்கி வைக்கும்போது சிறிதளவு உப்பை அவற்றில் தடவி வைத்தால் ஆப்பிள் கருத்து போகாமல் இருக்கும்.

சமையல் அறை குறிப்புகள் (kitchen tips) 4:

நாம் வாங்கும் சில ஆடைகளில் அதிகமாக சாயம் போகும், அந்த சமயத்தில் அலசும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்த பிறகு அலசினால். ஆடையில் அதிகளவாக சாயங்கள் போவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

சமையல் அறை குறிப்பு (kitchen tips) 5:

பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்கள் விளக்கும் போது எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து நல்ல பேஸ்ட்டு போல் கலந்து வைத்துக்கொண்டு, இந்த கலவையை கொண்டு பித்தளை பாத்திரத்தை விளக்கினால் தங்கம் போல் ஜொலிக்கும்.

சமையல் அறை டிப்ஸ் (kitchen tips) 6:

சாதாரணமா நாம் காலிஃபிளவரில் இருக்கும் புழுவை எடுப்பதற்கு வெந்நீரில் வேகவைப்போம், அப்போது சிறிதளவு உப்பும் சேர்த்து வேகவைத்தால், அவற்றில் இருக்கும் புழு மற்றும் கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

காலிஃபிளவரும் வெள்ளையாகவே இருக்கும்.

சமையல் அறை டிப்ஸ் (kitchen tips) 7:

உப்பை எப்போதும் பிளாஸ்ட்டிக் டப்பாவில் தான் கொட்டி வைக்க வேண்டும்.

பிளாஸ்ட்டிக் டப்பாவை தவிர வேறு எந்த பாத்திரத்தில் கொட்டி வைத்தாலும், சிலநாட்களில் அந்த பாத்திரம் உப்பின் அரிப்பு தன்மையால் தேய்மானம் ஏற்பட்டு, ஓட்டை விழுந்துவிடும்.

எனவே பிளாஸ்ட்டிக் டப்பாவில் உப்பை கொட்டி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

சமையல் அறை டிப்ஸ் (kitchen tips) 8:

டைனிங் டேபிள் அழுக்காக இருந்தால் அப்போது எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அந்த கலவையை கொண்டு, டைனிங் டேபிளை சுத்தம் செய்தால், அவற்றில் இருக்கும் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

சமையல் அறை டிப்ஸ் (kitchen tips) 9:

மிக்சி ஜாரில் உள்ள பிளைடு ஷார்ப்பாக இல்லையென்றால். அப்போது ஒரு கப் கல் உப்பை மிக்சி ஜாரில் போட்டு அரைத்தால் போதும்.

மிக்சி ஜாரில் உள்ள பிளைடு நல்ல ஷார்ப்பாக இருக்கும். இந்த சமையல் அறை டிப்ஸ் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சமையல் அறை டிப்ஸ் (kitchen tips)10:

நாம் சமைக்கும் போது சூடான திரவங்கள் நாம் மீது தெளித்துவிட்டது என்றால், அப்போது உடனே உப்பை அந்த இடத்தில் வைத்துவிட்டீர்கள் என்றால் எரிச்சல் உடனே சரியாகிவிடும்.

Related Posts

Leave a Comment

Translate »