குபேர விளக்கு ஏற்றும் முறை..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

செல்வத்தின் அதிபதி குபேரர் என்று சொல்வார்கள்… எனவே நம் வீட்டில் அனைத்து செல்வங்களும், நிலைத்து இருக்க குபேரரை வழிபட வேண்டும். குபேரர் அருள் கிடைக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

குபேரர் தீபம் ஏற்ற சரியான நேரம்: அதாவது குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று மாலை 05 மணி முதல் இரவு 08 மணிக்குள் குபேர விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

குபேர விளக்கு ஏற்றும் முறை ( Lakshmi Kubera Vilakku Etrum Murai) விளக்கம்: 1

குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த கோலத்திற்கு செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்பு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் மஞ்சள் வைத்து, மற்றொரு பகுதியில் குங்குமம் வைத்து நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் நிலைப்படியின் இருபுறமும் வைக்க வேண்டும்.

பிறகு நிலைப்படியின் இருபுறமும் பூ வைக்க வேண்டும்.

குபேர விளக்கு ஏற்றும் முறை (Lakshmi Kubera Vilakku Etrum Murai) விளக்கம்: 2

வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும். முதலில் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு நல்லெண்ணெய் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி குபேரர் விளக்கு ஏற்ற வேண்டும்.

இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள், துன்பங்கள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் கரையும்.

இந்த குபேர விளக்கு ஏற்றும் முறையை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் நமக்கு கிடைக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »