சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கற்பூரம் தயாரிக்கும் முறை

சுயதொழில் வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி ..!

சுயதொழிலில் சிறந்த தொழிலாக விளங்குகிறது இந்த கற்பூரம் தயாரிப்பு. குறிப்பாக இந்த கற்பூரம் இந்து மதத்தினர் தினமும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக விளங்குகிறது. அதுமட்டும் இன்றி இந்து கோயில்களிலும், சித்த மருத்துவத்திற்கும் இதன் தேவை அதிகளவு உள்ளதால் தயங்காமல் இந்த தொழிலை துவங்கலாம். குறிப்பாக இந்த தொழில் துவங்குவதற்கு இட வசதியோ, வேலையாட்களோ தேவை இல்லை. வீட்டில் இருந்தே சிறிய அறையில் செய்யக்கூடிய தொழில்.  ஆண், பெண் இரு பலரும் செய்யக்கூடிய சிறந்த தொழிலாகவும் விளங்குகிறது.

சரி வாருங்கள் இந்த பகுதியில் கற்பூரம் தயாரிக்கும் முறை(karpuram seivathu eppadi) பற்றி பார்ப்போம்.

கற்பூரம் தயாரிக்கும் முறை

கற்பூரம் தயாரிப்பு தொழில் – மூலப்பொருட்கள்:-

இந்த  கற்பூரம் ஊசி இலை தாவரம் என்கின்ற இலையில் இருந்துதான் தயாரிக்கின்றனர், அதுவும் சிலவகையான கெமிக்கல் மற்றும் இதர பொருட்களை சேர்த்து தான் இந்த கற்பூரத்தை தயாரிக்கின்றனர்.

இருப்பினும் இந்த கற்பூரம் செய்வதற்கு மூலப்பொருட்கள் மிக எளிதாக நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதாவது கற்பூர பொடி, கற்பூர கட்டி என்று அனைத்து நாட்டு மருந்து கடையிலும் விற்கப்படும். அவற்றை வாங்கி கற்பூரம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது Indiamart.com என்ற  இணைய தளம் வழியாகவும் வாங்கலாம்.

இந்த மூலப்பொருட்களின் விலை கிலோ ரூ.750/- முதல் ரூ.800/- வரை கிடைக்கும்.

கற்பூரம் தயாரிக்கும் இயந்திரம் விலை (அல்லது) சூடம் தயாரிக்கும் இயந்திரம் விலை

இந்த கற்பூரம் தயாரிப்பதற்கு முக்கியமாக கேம்பர் மிசின் தேவைப்படும். இந்த கேம்பர் மிசின் மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் கிடைக்கும். மேலும் indiamart.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் மூலமும் ஆடர் செய்து வாங்கி கொள்ளலாம். இந்த கேம்பர் அதாவது (கற்பூரம் தயாரிக்கும் இயந்திரம் விலை) ரூ.65,000/-

இந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க தயங்குபவர்கள், வாடகைக்கு கூட வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

கற்பூரம் தயாரிக்கும் இயந்திரம் (camphor making machine)

கற்பூரம் தயாரிக்கும் முறை :

சூடம் தயாரிப்பது எப்படி.? இந்த  கற்பூரம் தயாரிப்பு ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. கேம்பர் இயந்திரம் வாங்கிவிட்டோம் என்றால் எளிதாக செய்துவிட முடியும்.

சரி வாங்க சூடம் தயாரிப்பது எப்படி என்று இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க.

கேம்பர் இயந்திரத்தில் மூலப்பொருட்களான கற்பூர கட்டியையோ அல்லது பொடியையோ இந்த இயந்திரத்தில் கொட்டினால் போதும் கற்பூரங்கள் அச்சிடப்பட்டு வெளிவரும்.

இவற்றில் சிறிய கற்பூரம், பெரிய கற்பூரம் என்று இரண்டு வகை உள்ளது. சிறிய கற்பூரம் வேண்டும் என்றால் சிறிய அச்சியை மாட்ட வேண்டும் அல்லது பெரிய கற்பூரம் வேண்டும் என்றால் பெரிய அச்சியை மாட்ட வேண்டும்.

கற்பூரம் தயாரித்ததும் அவற்றை எடுத்து பேக்கிங் செய்து, லேபிள் ஓட்டினால் போதும், கற்பூரம் விற்பனைக்கு தயார்.

கற்பூரம் தயாரிப்பு தொழில் – சந்தை வாய்ப்பு:

இந்தியாவில் கற்பூரத்தின் தேவை அதிகளவு உள்ளதால், அனைத்து மல்லிகை கடைகளில் விற்பனை செய்யலாம்.

கிராமப்புறங்களில் உள்ள சிறு பெட்டி கடையிலும் விற்பனை செய்யலாம். அதுமட்டும் இன்றி நமக்கு தெரிந்தவர்களின் வீட்டிற்கு சென்றும் விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எனவே கற்பூரம் தயாரிப்பு என்பது மிக அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளது.

கற்பூரம் தயாரிப்பு தொழில் – பயன்கள்:

அனைத்து இந்துக்கள் வீட்டில் பூஜை செய்வதற்கும், ஹோமங்கள் வளர்ப்பதற்கும் அதிகளவு பயன்படுகிறது.

அனைத்து இந்து கோவில்களில் பூஜைகள் செய்து தினமும் தீப ஆராதனை செய்வதற்கு பயன்படுகிறது. மேலும் சித்த மருத்துவத்திற்கு மருத்துவ பொருளாக பயன்படுகிறது. எனவே கற்பூரம் தயாரிப்பு என்பது மிக அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளது.

Related Posts

Leave a Comment

Translate »