தீபம் ஏற்றும் முறையும் பலனும்..! Deepam Etrum Murai in Tamil..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தீபம் ஏற்றும் முறை:- எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் அல்லது தினமும் நம் வீட்டில் இறைவனை பிராத்திக்கும் முன்பும், நாம் செய்யக்கூடிய முதல் காரியம் என்னவென்றால் தீபம் ஏற்றுவது தான். இந்த தீபம் ஏற்றுவதினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும். என்ன எண்ணெயில் தீபம் ஏற்றலாம், என்ன திரியால் தீபம் ஏற்ற வேண்டும், என்ன விளக்கில் தீபம் ஏற்றலாம், எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். என்ற பல கேள்விகள் நம் மனதில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவை அனைத்தையும் தெளிவுபடுத்தும் வகையில் இந்த பதிவில் தீபம் ஏற்றும் முறை பற்றி சில தகவல்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

விளக்கு ஏற்றும் நேரம் (veetil vilakku etrum neram):-

தீபம் ஏற்றும் முறை – Deepam Etrum Murai in Tamil:- பொதுவாக காலையில் 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன் நம் வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு விளக்கேற்ற வேண்டும். அதாவது 06.00 மணிக்கு (deepam etrum neram) விளக்கேற்ற வேண்டும்.

விளக்கில் எத்தனை முகம் ஏற்ற வேண்டும்?

Veetil vilakku etrum murai:- தீபத்தில் ஒரு முகம் என்கின்ற ஏக்கமுகம், அந்த ஒரு முகம் ஏற்றினால் நாம் நினைத்த செயல் கைகூடும்.

இரண்டு முகம் ஏற்றினால் குடும்பம் சிறந்து விளங்கும். மூன்று முகம் ஏற்றி வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் செல்வத்தை பெருக்கும். ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மைகளையும் உண்டாக்கும்.

தீபத்தின் ஒளியில், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இருப்பதாக நம் இதிகாசங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட தீபத்தை நம் வீட்டில் ஏற்றும் போது சில முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி இருக்க வேண்டும்.

இறந்தவர்களின் படத்திற்கு விளக்கினை ஏற்றும் போது மட்டும் தான் வடக்கு திசையில் ஏற்ற வேண்டும். மற்ற சமயங்களில் விளக்கின் திசையை மாற்றக் கூடாது. நாம் கோவில்களில் விளக்கினை ஏற்றினாலும், நம் வீட்டில் விளக்கினை ஏற்றினாலும், இரண்டு கால்களையும் மடக்கி சம்மணம் இட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

சில விசேஷ நாட்களில் நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்போம். அந்த குத்துவிளக்கினை கீழே வைத்து ஏற்றும் பொழுது குனிந்த நிலையில் தான் ஏற்றுவோம். அப்படி ஏற்றக் கூடாது. தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும் திசை பலன்கள் –  Deepam etrum thisai:-

தீபம் ஏற்றும் முறை – Deepam Etrum Murai in Tamil:-

கிழக்கு திசை நோக்கு விளக்கு ஏற்றுவதினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும்.

மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும்.

வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது.

விளக்கு ஏற்றும் எண்ணெய் – Deepam vilakku etrum ennai:-

தீபம் ஏற்றும் முறை (Veetil vilakku etrum murai):-

முதலில் விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்களை பற்றி தெரிந்து கொள்வோம். சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், சுட்ட எண்ணெயினாலும் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. இவையெல்லாம் நம் வீட்டில் தற்திரியத்தை கொண்டு வைந்து சேர்க்கும்.

தீபம் ஏற்றும் முறை அதன் பலன் – Deepam etrum palangal in tamil:-

இப்பொழுது எந்த எண்ணெயால் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

நெய்:-

நெயில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும், எதை நினைத்து அந்த தீபம் ஏற்றுகிறோமோ அந்த காரியம் நிறைவேறும்.

நல்லெண்ணெய்:-

நல்லெண்ணையில் விளக்கு ஏற்றினால் ஆரோக்கியத்தை பெற்றுத்தரும்.

தேங்காய் எண்ணெய்:-

தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றினால் வசீகரத்தை உண்டு செய்யும்.

இலுப்பை எண்ணெய்:-

வீட்டில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றினால் சகலகாரியத்திலும் வெற்றியை பெற்று தரும்.

விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றுவதால் புகழ் உண்டாக்கும்.

வேப்ப எண்ணெய்:-

வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால் கணவன், மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும்.

இந்த ஐந்து எண்ணெய்யும் சேர்த்து ஏற்ற கூடிய பஞ்சக்கூட்டு எண்ணெயில் விளக்கு ஏற்றினால் தெய்வத்துடைய அருளையும், குலதெய்வத்துடைய அருளையும் பெற்று தரும்.


Related Posts

Leave a Comment

Translate »