
ஒரு மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முடிவே கிடையாது. அது அவனது தொழில் சார்ந்த வாழ்க்கை என்றாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும் சரி, அவன் வாழ்நாள் முழுவதும் வளர்ச்சியில் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட உத்திகள் மற்றும் குறிப்புகள், எதற்கும் முன்னுரிமை தர வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும்.
குறிப்புகள் :
👉 முதலில் நீங்கள் உங்களை நன்கு உணர்ந்து என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
👉 இலக்குகளை தீர்மானித்த பின்னர், அதை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும். நீங்கள் நியமிக்கும் கால வரம்பு நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக இருக்க வேண்டும்.
👉 ஒவ்வொரு நாளை தொடங்கும் பொழுதும் உங்களது தனிப்பட்ட இலக்குகளை அடையும் வகையில் உங்களது அனைத்து செயல்களும் இருக்க வேண்டும்.
👉 ஒருவேளை உங்களது ஒன்று இரண்டு செயல்கள் உங்களது இலக்கை அடைய தடையாக இருப்பின் அந்த செயல்களை தவிர்த்து விட வேண்டும்.
👉 ஒரு நாளுக்கு நீங்கள் பத்து மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால், அந்த வேலை, பத்து மணி நேரத்துக்கான பலனை தந்துவிடாது. அதில் நிறைய குறுக்கீடுகள் இருக்கலாம். ஒருவேளை முழுமையாக முடித்துவிட்டு மற்றொரு வேலையை புதிதாக தொடங்கலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும்.
👉 ஆகையால் நமக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளின் முக்கியத்துவம் அறிந்து, முன்னுரிமை அளிக்க வேண்டிய வேலைகளுக்கு முதலில் முன்னுரிமை அளித்து வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும்.
👉 நமது பணி மிகுதியால் நமது இலக்குகளை மறந்து விடக்கூடாது. அவ்வப்போது நமது இலக்குகளை நினைவூட்டும் வகையில் நமது அன்றாட செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.
👉 உங்களது வேலையை யாராவது விமர்சனம் செய்தால் அதை மனதிற்கு எடுத்துக் கொள்ளாமல், உங்களை திருத்திக் கொள்வதற்கான தகுந்த சந்தர்ப்பமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
👉 நீங்கள் வெற்றி பெற்றால், அதற்காக நீங்கள் பயன்படுத்திய உத்திகளை உங்களது சக ஊழியர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றியின் மீது உள்ள மற்றவர்களின் உணர்வை, உங்களை மேலோங்கச் செய்யும்.
👉 உலகத்தை எவராலும் மாற்ற இயலாது. ஆனால் அதற்கு ஏற்றவாறு நமது செயல்களைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். மன உளைச்சல்; உண்டாகும் பொழுது பொறுமையை கையாளவும், பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும் பொழுது உங்களை எவ்வாறு தனித்து நிற்கவும் தன்னம்பிக்கையுடன் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
👉 நிறைய வேலைகள் செய்யும் பொழுது ஒருவரின் ஆக்க வளம் அதிகரிக்கிறது. சில சமயங்களில், தொடர்ந்து வௌ;வேறு வேலைகளை செய்வது கடினமாக இருந்தாலும், ஐந்து நிமிட இடைவெளி அவ்வேலைகளை செய்வதற்கான புத்துணர்வை உங்களுக்கு மீட்டுத் தரும்.
👉 அனைத்து பிரச்சனைகளையும் நீங்களே சிந்தித்து தீர்க்க வேண்டும் என்பதில்லை. சக ஊழியர்களிடமோ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவரிடமோ நீங்கள் அறிவுரைகளை கேட்கலாம்.
👉 நீங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டுமானால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, சவால்களை எதிர்க்கொள்வது மற்றும் நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு நம்மை விரைவாக மாற்றிக் கொள்வது போன்றவற்றை செய்ய வேண்டும்.
👉 உங்களது அன்றாட பணிகளை தினமும் 5 நிமிடமாவது நினைவுகூறுங்கள். அதில் நீங்கள் சிறப்பாக செய்த விஷயம் எது? சிறப்பற்றது எது? என்று உங்களை நீங்களே வினவும் பொழுது உங்களுக்கே தெரியும்..!