உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வேர்க்கிறதா? இதோ நிரந்தர தீர்வு..!
இது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை. தினமும் உள்ளங்கை வேர்த்து கொண்டே இருக்கும் . கையில் எதையுமே வைத்திருக்க முடியாது முற்றாக நனைந்து விடும்.
சிலருக்கு உள்ளங்காலிலும் இருக்கும் . இதனால் எரிச்சல் அடைவார்கள் . இந்த மருத்துவ குறிப்பு உங்களுக்காக தான் . இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருந்து கொள்ளுங்கள்..!
2 அல்லது 3 தக்காளி பழங்களை எடுத்து நன்றாக பிழிந்து சாறு எடுத்து அந்த சாறில் சிறிது நேரம் கைகளை வைத்திருந்து எடுத்தால் உள்ளங்கை வியர்வை குறையும். அதை காலில் தடவி வந்தால் உள்ளங்கால் வியர்வை குறையும். தொடர்ந்து செய்தால நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து தொடர்ந்து உடலுக்கு குளித்து வந்தால் வியர்வை குறையும். இது மிகவும் இலகுவான மருத்துவ முறையாகும்.