பெண்களுக்கும் நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இத செய்யச் சொல்லுங்க…

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எல்லோருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். தற்போது இருக்கும் காலச்சூழலில் முடி யாருக்குமே நீண்டு வளர்வதில்லை.

தண்ணீர், ஷாம்பு, எண்ணெய், உண்ணும் உணவு என நாம் பயன்படுத்தும் எல்லாவற்றிலுமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வதில்லை.

அதற்கு பதிலாக உதிர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் முடி நீண்டு வளர வேண்டுமென்ற ஆசை இருந்தால் இந்த இயற்கை தைலத்தை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தச் சொல்லுங்கள்.

முடி நீண்டு வளர இயற்கைத் தைலம் :

தேவையான பொருட்கள்:

▪️நெல்லிக்காய் பொடி – 10 கிராம்
▪️தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
▪️தான்றிக்காய் பொடி – 10 கிராம்
▪️வேப்பிலை பொடி – 10 கிராம்
▪️செம்பருத்தி பூ பொடி – 10 கிராம்
▪️சந்தனப்பொடி – 10 கிராம்
▪️கருவேப்பிலை பொடி – 10 கிராம்
▪️கரிசலாங்கன்னி பொடி – 10 கிராம்
▪️வெட்டிவேர் – 10 கிராம்
▪️ரோஜா இதழ் – 10 கிராம்
▪️மருதாணி பொடி – 10 பொடி

செய்முறை:

இந்த எல்லா பொடிகளையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, நன்றாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்ததும் இதை அடுப்பிலிருந்து இறக்கி விட்டு, ஆறவிடவும்.

இதை நல்ல சூரிய ஒளியில் ஒரு வாரத்துக்கு வைத்து எடுக்கவும். அதன்பின் அந்த எண்ணெயை வடிகட்டிப் பயன்படுத்தவும்.

இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துவதால், முடி உதிர்வது முதலில் குறையும்.

�️ உடல் சூடு தணியும்.
�️ இளநரை குறையும்.️ கூந்தல் நீண்டு அடர்த்தியாக வளரும்

Related Posts

Leave a Comment

Translate »