எண்ணெய்க்குளியல் செய்வதால் பலன்கள்
உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும், ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும், தலை மயிர் நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.
பெண்கள், ஆண்கள், எண்ணெய் குளியல் நாள் அட்டவணை
பெண்களும் எண்ணைக்குளிப்பும்
- ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.
- திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.
- செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்
- புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.
- வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.
- வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.
- சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
ஆண்களும் எண்ணெய் குளிப்பும்
- திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்.
- செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு கண்ட மாலை நோய் வரும்.
- வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.
- வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.
நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள்?
புதன் அறிவினையும், சனி ஆயுளையும் உடல் நலத்தினையும் தருவதாக உயர்வாக நினைத்தார்கள் – மதித்தார்கள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. வெது வெதுப்பான சுடு நீரில் தான் குளிக்க வேண்டும்.