ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் | French Fries Recipe

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

  • 1/2 கிலோ பெரிய சைஸ் உருளைக்கிழங்கு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 சிட்டிகை மிளகு தூள்

How to make ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

  • முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி அதை நீளவாக்கில் ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு ஏற்ப நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும். (20 நிமிடங்கள் இவ்வாறு தண்ணீரில் போட்டு வைப்பதால் உருளைக்கிழங்கின் வெளியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீரில் இறங்கி விடும். பொரிக்கும் போது மொரு மொறுப்பாக வரும்.)
  • 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். பின்பு ஒரு மேஜைக்கரண்டி உப்பை அதில் சேர்த்து கொள்ளவும்.
  • அடுத்து தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து இதில் போடவும்.
  • ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். (இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு பொரிக்கும் போது உள்ளே மிருதுவாகவும் வெளியே மொறு மொறுப்பாகவும் இருக்கும்.)
  • பத்து நிமிடங்களுக்குப் பிறகு சுடு தண்ணீரில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஒரு துணியை விரித்து உருளைக்கிழங்கை பரப்பி அதில் இருக்கும் ஈரத்தை துடைத்து கொள்ளவும். (தண்ணீருடன் உருளைக்கிழங்கை எண்ணெயில் போட கூடாது.)
  • பிரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு உருளைக்கிழங்கை இரண்டு கட்டங்களாக பொரிக்க வேண்டும்.
  • முதலில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உருளைகிழங்கை அதில் போட்டு நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் பொரித்துக் கொள்ளவும்.
  • நான்கைந்து நிமிடங்களுக்கு பிறகு உருளைக்கிழங்கை எடுத்து ஒரு தட்டில் போட்டு எண்ணெயை வடிய விடவும். (இப்பொழுது உருளைகிழங்கு வெண்மை நிறமாக தான் இருக்கும். இரண்டாம் கட்டமாக பொரிக்கும் போது தான் உருளைக்கிழங்கை பொன்னிறமாக எடுக்க வேண்டும்.)
  • அடுத்து இரண்டாம் கட்டமாக எண்ணெயை நன்றாக சுட வைத்து அதில் உருளைக்கிழங்கை போடவும்.
  • இம்முறை பொன்னிறமாகும் அளவிற்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு bowl ல் போட்டு சிறிது அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் தூவி கிளறி கொள்ளவும்.
  • இப்பொழுது ரெஸ்டாரன்ட் களில் கிடைக்கும் பிரெஞ்ச் ஃப்ரை களைப் போன்றே சூடான மொறு மொறுப்பான பிரெஞ்சு ப்ரைஸ் தயார்.
  • இதை வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »