அச்சு முறுக்கு (Rose Cookies)

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for அச்சு முறுக்கு (Rose Cookies)

  • 1 கப் பச்சரிசி மாவு
  • 1 மேசைக்கரண்டி மைதா
  • 3/4 டம்ளர் தேங்காய் பால்
  • 3/4 கப் வெல்லம்
  • 1 ஏலக்காய் தூள் செய்தது
  • எள் சிறிதளவு
  • கடலை எண்ணெய் பொரிப்பதற்கு
  • உப்பு தேவையான அளவு

How to make அச்சு முறுக்கு (Rose Cookies)

  • அரிசி மாவு, மைதா, உப்பு, ஏலக்காய், எள் இவை அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை தூள் செய்து போடவும். வெல்லம் கரையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
  • பின்பு அடுப்பை பற்ற வைக்கவும். வெல்லம் தண்ணீரில் நன்கு கரைந்தவுடன் வடிகட்டி ஆற வைக்கவும். பின்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  • அடுத்து தேங்காய் பால் ஊற்றி கலக்கவும். மாவை தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். என்னை சிறிது சூடானதும் அதில் முறுக்கு அச்சை சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
  • சூடான அச்சைஎடுத்து தயார் செய்து வைத்திருக்கும் மாவில் முக்கால் பாகம் அளவிற்கு அச்சுமூழ்குமாறு தோய்த்துகொள்ளவும்.
  • முக்கால் பாகத்திற்கு மேல் அச்சைமாவில் இறக்கினால் அச்சை எண்ணெயில் இடும்போது முறுக்கு மாவு எண்ணெயில் இறங்குவதற்கு சிரமமாகஇருக்கும்.
  • மாவில் மூழ்கிய அச்சை எண்ணெயில் விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
  • முறுக்கு பாதி வெந்தவுடன், ஒரு கரண்டியால் முறுக்கை எண்ணெயில் இறக்கிவிடவும். பின்பு முறுக்கை திருப்பி விட்டுஅரை வினாடியில் எடுத்துவிடவும்.
  • மறுபடியும் அச்சை முன்பு செய்தது போலவே எண்ணெயில் போட்டு வைக்கவும்.
  • ஒவ்வொரு முறையும் முறுக்கு செய்தபிறகு இதேபோன்று அச்சை எண்ணெயில் போட்டு விடவும். இவ்வாறு செய்தால்தான் மாவு சுலபமாக அச்சில் ஒட்டும்.
  • சுட சுட அறுசுவை அச்சு முறுக்கு தயார். வீட்டில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »