Ingredients for கோசம்பரி
- 1/2 கப் பாசி பருப்பு
- 1 வெள்ளரிகாய் தோல் நிகி, பொடியாக நறுக்கியது
- 1 கேரட் தோல் நிகி,பொடியாக நறுக்கியது
- 1 டேப்ளேஸ்பூன் சிவப்பு குடைமிளகாய் விருப்பப்பட்டால்
- 1 டேப்ளேஸ்பூன் தக்காளி
- 1/2 எலுமிச்சை சாறு
- 1/2 கப் தேங்காய்
தாளிப்பதெற்கு :
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 டேப்ளேஸ்பூன் இஞ்சி பொடியாக நறுகியது
- 1 பச்சைமிளகாய் பொடியாக நறுகியது
- 1 சிட்டிகை பெருங்காயம்
- சிறுது கருவேப்பில்லை
How to make கோசம்பரி
- பாசி பருப்பை 30 நிமிடம் தண்ணீரில் கழுவி ஊற வைக்கவும்.
- 30 நிமிடம் கழித்து தண்ணீரை முழுமையாக வடிகட்டவும்
- பருப்பில் நறுக்கிய வெள்ளரி, கேரட், கேப்சிகம் மற்றும் தக்காளி சேர்க்கவும்.
- ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்க்கவும், கடுகு பொரிந்தவுடன் , இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். பின்பு பயறு கலவையில் சேர்க்கவும்.
- உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இறுதியாக அரைத்த தேங்காயைச் சேர்த்து மெதுவாக கலக்கவும். ஆரோக்கியமான பாரம்பரிய சாலட் பரிமாற தயாராக உள்ளது.
Notes
பரிமாறும் நேரத்தில் உப்பு சேர்க்கவும்.