பன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for பன்னீர் பட்டர் மசாலா

  • 250 கிராம் பன்னீர்
  • 1 கப் வெண்ணெய்
  • 1 1/2 வெங்காயம்
  • 4 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 6 to 8 முந்திரி
  • 1 பிரியாணி இலை
  • 2 ஏலக்காய்
  • 1 பட்டை
  • 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • மிளகாய்த்தூள் காரத்திற்கேற்ப
  • உப்பு தேவையான அளவு
  • கசூரி மேத்தி சிறிதளவு
  • 1 மேசைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீம்

How to make பன்னீர் பட்டர் மசாலா

  • அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை மேசைக்கரண்டி வெண்ணெய்யை ஊற்றி கொள்ளவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அதில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், மற்றும் 8 முந்திரிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி மென்மையாக வதங்கும் வரை கடாயை ஒரு தட்டால் மூடி வேக வைக்கவும்.
  • பின்பு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
  • ஆறியவுடன் வதக்கிய இந்த வெங்காயம் தக்காளியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு pan ஐ அடுப்பில் வைத்து 4 மேசைக்கரண்டி வெண்ணெய்யை அதில் ஊற்றவும்.
  • வெண்ணெய் உருகிய உடன் அதில் பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 2, ஒரு பிரியாணி இலையை போடவும். அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை அதில் ஊற்றவும்.
  • பின்பு அதில் ஒன்றரை மேசைக்கரண்டி கரம் மசாலா உடன் அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை போடவும். இறுதியாக உப்பை சேர்க்கவும்.
  • இந்த கிரேவியை நன்கு கிளறி மூடி வைக்கவும். ஏழிலிருந்து எட்டு நிமிடத்திற்கு மிதமான தீயில் வேகவிடவும்.
  • அதற்குள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • 8 நிமிடத்திற்கு பிறகு pan ஐ திறந்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் பன்னீரை போட்டு கலந்து கொள்ளவும்.
  • பிறகு சிறிது கசூரி மேத்தி எடுத்து கசக்கி கிரேவி மீது தூவவும்.
  • கிரேவியை இறக்கும் முன்பு ஒரு மேஜைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது நீங்கள் விரும்பிய சூடான சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
  • இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »