Ingredients for முருங்கைக்காய் வடை
- 4 முருங்கைக்காய்
- 1 கப் பொட்டுக்கடலை
- தேவையான அளவு உப்பு
- 2 பச்சைமிளகாய்
- 1/2 டீஸ்பூன் இஞ்சித்துருவல்
- 1 வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
- 1 பூண்டு
- பொரிப்பதற்கு எண்ணெய்
- 2 டேப்ளேஸ்பூன் கொத்தமல்லி
How to make முருங்கைக்காய் வடை
- முருங்கைக்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு தோலை நீக்கி சதைப்பற்றான பகுதி மற்றும் விதைகளைத் தனியே எடுத்து வைக்கவும்.
- பொட்டுக்கடலையை நீர் விடாமல், ரவை பதத்திற்கு மிக்ச்சியில் உடைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் உடைத்த பொட்டுக்கடலை ரவை, முருங்கைக்காயின் சதைப்பற்றான பகுதி மற்றும் விதைகள், பெருங்காயம், உப்பு, இஞ்சித்துருவல், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், இவற்றையும் அறிந்து சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலத்து எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.