பாதங்களுக்கு மேல் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு எளிய முறை ஸ்கரப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்: 1 ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் சோப் ஆயில், தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும் பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவ நன்கு பயனளிக்கும்.
# நீர் சிகிச்சை: தேவையான பொருட்கள்: வெதுவெதுப்பான நீர், கல்லுப்பு, சோப் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சோப் ஆயில் மற்றும் கல்லுப்பு ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அதில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விடும்.
பிறகு தேங்காய் எண்ணெய் கொண்டு தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பாதங்கள் மிருதுவாகும்.