நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்.:

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும் ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெய்யை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

ஓமம் பொடி சிறிது உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால் நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும். அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.

சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால் சோர்வு நீங்கும். உடல் பலம் பெற ஓமம் (சிறிதளவு) எடுத்து நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.

வயிற்று வலி ஏற்பட்டால் ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.

பல்வலி இருந்தால் இந்த எண்ணெய்யைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல்வலி மறையும்.

வயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால் ஓம எண்ணெய்யை வயிற்றின் மீது தடவ நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »