Ingredients for காலிஃபிளவர் பட்டாணி குருமா
- 1 medium காலிஃபிளவர்
- 1/2 கப் fresh பச்சை பட்டாணி
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 2 பிரியாணி இலை
- 1 துண்டு பட்டை
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1/4 மேசைக்கரண்டி கடுகு
- சோம்பு தேவையான அளவு
- இஞ்சி தேவையான அளவு
- 2 பூண்டு பல்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்த் தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- மிளகாய்த்தூள் தேவையான அளவு
- 1 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை
- 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 6 to 7 முந்திரி
How to make காலிஃபிளவர் பட்டாணி குருமா
- முதலில் காலிஃப்ளவர், தக்காளி, மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை துண்டு, கிராம்பு, கடுகு, மற்றும் 1 மேஜைக்கரண்டி சோம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், அவரவர் தேவைக்கேற்ப மிளகாய்த்தூள், கரம் மசாலா, மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுத்து இதனுடன் காலிஃபிளவர், பச்சை பட்டாணி, மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒரு மூடி போட்டு காய்கறிகள் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.
- காய்கறிகள் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, அரை மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், மற்றும் 6 லிருந்து 7 முந்திரியை ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றி நன்கு கிளறவும். பின்னர் 3 லிருந்து 5 நிமிடம் வரை pan ல் மூடி போட்டு வேக விடவும்.
- குருமாவை இறக்குவதற்கு முன் தேவையான அளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மணமான காலிஃபிளவர் பட்டாணி குருமா தயார். இதை வீட்டில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.