குலாப் ஜாமுன்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for குலாப் ஜாமுன்

  • 500 கிராம் குலோப் ஜாம் மாவு
  • 700 கிராம் சர்க்கரை
  • நெய் தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் தேவையான அளவு
  • பிஸ்தா தேவையான அளவு

How to make குலாப் ஜாமுன்

  • முதலில் ஒரு bowl ல் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பக்குவமாக பிசைந்து கொள்ளவும். (மாவை அழுத்தியோ அல்லது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைய கூடாது.
  • அப்படி பிசைந்தால் குலோப் ஜாம்ஐ பொரித்து எடுக்கும் போதே இறுக்கமாக அல்லது விரிசல் விழுந்து விடும்.)
  • மாவை பக்குவமாக பிசைந்ததும் அதில் தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.
  • மாவு பக்குவத்தை எட்டுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு சர்க்கரைக்கு மேலே ஒரு இன்ச் அதிகமாக தண்ணீர் வருமளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அடுப்பிலிருந்து இறக்கி பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு வட சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக பக்குவமாக உருட்டிஎண்ணெயில் போடவும். (மாவை சிறு சிறு உருண்டைகளாக ஒரே நேரத்தில் உருட்டி வைக்கக்கூடாது. ஏனென்றால் மாவில் விரிசல் விழுந்து விடும்.)
  • மாவு உருண்டைகளை மெதுவாக திருப்பி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
  • உருண்டைகள் இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.
  • அப்பொழுது தான் குலோப் ஜாம்ல் ஜீரா நன்றாக ஒட்டி மிருதுவாக இருக்கும்.
  • இவ்வாறு வடசட்டியின் அளவிற்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறையாக உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து ஜீராவில் போடவும்.
  • மொத்தமாக பொரித்து போட்டதும் அதை அப்படியே ஒரு மூடி போட்டு 5 லிருந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
  • 6 மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதன் மேலே சிறு பிஸ்தா துண்டுகளை வைத்தால் உங்கள் இனிப்பான, சுவையான குலோப் ஜாம் தயார்.
  • இது வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டாருக்கு கொடுத்து உண்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »