வெஜிடபிள் கட்லெட்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for வெஜிடபிள் கட்லெட்

  • 3 உருளைக்கிழங்கு
  • 2 கேரட்
  • 4 to 5 பீன்ஸ்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1 மீடியம் சைஸ் ஆனியன்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் மைதா மாவு
  • 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • Bread Crumbs தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்த்தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • மிளகாய்த்தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • மிளகுத்தூள் தேவையான அளவு
  • 8 to 10 முந்திரி

How to make வெஜிடபிள் கட்லெட்

  • முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின்பு கேரட், பீன்ஸ், வெங்காயம், மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா மற்றும் அவரவர் தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  • இந்த கலவை சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அதில் கால் கப் தண்ணீரை ஊற்றி காய்களை 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 அல்லது 3 நிமிடத்திற்கு பிறகு காய்கள் சிறிது வெந்ததும் அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
  • பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். (இந்த கலவை நன்றாக மாவு மாதிரி இருக்க வேண்டும்.
  • இந்த கலவை தண்ணியாக இருந்தால் அதில் சிறிது bread crumbs ஐ சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.)
  • இந்த கலவை சிறிது ஆறியவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லி, மிளகுத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • இப்பொழுது கட்லெட் pieces தயார் செய்வதற்கு தேவையான bread crumbs, மற்றும் அரை கப் மைதா மாவில் தண்ணீர் விட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது செய்து வைத்திருக்கும் கட்லெட் மாவை உங்களுக்குப் பிடித்தமான வட்ட வடிவிலோ அல்லது ஹார்டின் வடிவிலோ தட்டி அதை மைதா மாவில் முக்கி பின்னர் bread crumbs ல் நன்கு இருபுறமும் புரட்டி போட்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சுட்டதும் இந்த கட்லெட் pieces pan ன் அளவுக்கேற்ப போடவும்.
  • ஒரு புறம் பொன்னிறமானதும் மற்றொரு புறம் திருப்பி விடவும்.
  • இரு புறமும் பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அதன் மேலே சிறு பொரித்த முந்திரி துண்டுகளை வைக்கவும்.
  • இதை கெட்சப் அல்லது சட்னியோடு சேர்த்து பரிமாறலாம்.
  • இப்பொழுது உங்கள் சூடான சுவையான கட்லெட் தயார்.
  • இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »