வெஜிடபிள் புலாவ்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for வெஜிடபிள் புலாவ்

 • 1/2 கப் பாசுமதி அரிசி
 • 1 பெரிய வெங்காயம்
 • 8 to 10 பீன்ஸ்
 • 1/2 கப் பட்டாணி
 • 1/2 கப் காலிஃப்ளவர்
 • 1 கேரட்
 • 3 பச்சை மிளகாய்
 • நெய் தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு
 • 2 பிரியாணி இலை
 • 1 பட்டை
 • 1 ஸ்டார் பூ
 • 3 ஏலக்காய்
 • 4 கிராம்பு
 • 8 to 10 முந்திரி
 • 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
 • புதினா தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு

How to make வெஜிடபிள் புலாவ்

 • முதலில் பாசுமதி அரிசியை எடுத்து நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி ஊருவதற்குள் கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
 • ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய விடவும்.
 • நெய் நன்கு காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, ஸ்டார் பூ, கிராம்பு, ஏலக்காய், மற்றும் பட்டை சேர்த்து வதக்கவும்.
 • பின்பு அதில் முந்திரி மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போடவும். பிறகு அதில் பச்சை மிளகாயையும், இஞ்சி பூண்டு பேஸ்ட்ஐயும் சேர்த்து வதக்கவும்.
 • அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், காலிபிளவர், மற்றும் பட்டாணி சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.
 • இரண்டு நிமிடம் வதங்கியதும் அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை போடவும். பின்பு அதில் 2 கப் தண்ணீர், சிறுது அளவு புதினா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • நன்கு கலக்கிய உடன் அதில் ஒரு மூடியை போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். (தண்ணீர் வற்றி சாதம் உதிரி உதிரியாக வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.)
 • சாதம் வெந்ததும் அதை எடுத்து ஒரு பவுலில் வைத்து அதில் சிறிது கொத்தமல்லி தூவி கார்னிஷ் செய்யவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான சுவையான வெஜிடபிள் புலாவ் தயார். இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »