பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் எனும் சர்வதேச தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நம்மைசுற்றி உள்ள வெளி உலகில் மட்டுமின்றி, பெரும்பாலான பெண்கள் இணைய ரீதியிலான குற்றங்களுக்கு இரையாகின்றனர். ஆன்லைனில் தவறாக நடத்தப்படுவதற்கான எளிதான இலக்காக இருக்கின்றனர். ஆகையால், ஆன்லைனில் பெண்களை இழிவுபடுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிப்பதில், ஆன்லைனில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதிலும் சமமான எச்சரிக்கை தேவை.
ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சமூக வலைதளங்களில் நட்பு கோரிக்கைகளை ஏற்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய பதிவுகளை யார் பகிர வேண்டும் என்று அறிந்து உங்கள் பார்வையாளர்களை தேர்வு செய்யுங்கள்.
முகநூல் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் உங்களை டேக் செய்யும் ஆலோசனைகளை ஆஃப் செய்து வைக்கவும்.
சமூக வலைத்தளங்களை உபயோகித்து உங்கள் பெயரை எவ்வாறு தேடலாம் என்பதை கட்டுப்படுத்துங்கள்.
லாக்-இன் அறிவிப்புகள், அனுமதிகளை இயங்கும்படி வைக்கவும். இது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து நிற்க உதவும்.
உங்களுடைய அனுமதி இன்றி, உங்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை யாராவது ஒருவர் வெளியிட்டால், அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளிக்கவும்.
எப்போதுமே உங்கள் பாதுகாப்பை முதன்மையாக கருதுங்கள். ஆன்லைன் அல்லது வெளி உலகில் என எந்த இடத்திலும் நீங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தால் உரிய சட்ட அமைப்புகள் அல்லது பாதுகாப்பு ஆதரவு குழுக்களை தொடர்பு கொள்ளவும்.