குளிர், பனிக்காலத்திலிருந்து குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பனிக்காலத்தில் குழந்தைகளை சற்று மிக கவனமாகவும் சரியாகவும் பராமரிக்க வேண்டும். குளிர் காலத்துக்கு ஏற்ற சரும பராமரிப்பை மேற்கொள்வது நல்லது.  குளிர்ந்த வெப்பநிலை குழந்தைகளின் சருமத்தை உலர செய்யும். சருமத்தில் சில வெடிப்புகள் போன்றவையும் காணப்படும். சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தைக் குளிர் காலத்தில் இருந்து காக்க முடியும்.

குழந்தைகளை நீண்ட நேரமாக குளிக்க வைக்க வேண்டாம். 5 நிமிடத்துக்குள் குளித்து விட்டுவரும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறந்த குழந்தைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். ஆனால், கால், இடுப்பு, டயாப்பர் உள்ள பகுதிகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். சுடுநீர் இல்லாமல் இளஞ்சூடான நீரில் குளிக்க வைப்பது நல்லது. சூடான நீரில் குளித்தால் சருமம் வறண்டு போகும்.

அதிக வாசனை, அதிக நுரை, அதிக கெமிக்கல்கள் இல்லாத சோப்பை பயன்படுத்துங்கள். குளிக்கும்போது, குழந்தைகளின் சருமத்தை ஸ்கரப் செய்ய வேண்டாம். துடைக்கும்போது, மிருதுவான துண்டால் ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.

குளிர், பனிக்காலத்தில் குழந்தையின் சருமம் உலர்ந்து காணப்படும். 6+ மாத குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ், சூப், பழங்கள் போன்ற நீர்ச்சத்து உணவுகளையும் சரியான அளவில் தர வேண்டும். 0-6 மாத குழந்தைகளுக்கு, தாய்ப்பால் அதிகமாகக் கொடுத்து உடலின் நீர்ச்சத்து அளவை பராமரித்துக்கொள்ள வேண்டும். மீன், நட்ஸ் மற்றும் நட்ஸ் பவுடர், அவகேடோ போன்றவை சருமத்தை காக்கும் உணவுகள்.

குளிரைத் தாங்க கூடிய கனமான உடைகளை அணிந்து விடுங்கள். ஆனால், குத்தாத, அரிக்காத உடைகளாக இருப்பது நல்லது. முழுக்கை, முழுக்கால் மூடும்படியான ஆடைகளை அணியலாம். காது, தலைக்கு மப்ளர் அணிந்து விடலாம்.

எப்போதுமே இளஞ்சூடாகவே குழந்தைகளுக்கு நீர் அருந்த கொடுக்கலாம். பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு கொதித்து ஆறவைத்த குடிநீரையே கொடுத்துப் பழகுங்கள். போதுமான அளவு நீர்ச்சத்து குழந்தைகளுக்கு முக்கியம். 

Related Posts

Leave a Comment

Translate »