புரதச்சத்து நிறைந்த சத்தான அடை

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 250 கிராம், கருப்பு உளுந்து – 100 கிராம்,
துவரம்பருப்பு – 1 கப்,
வெங்காயம் – 2,
காய்ந்த மிளகாய் – 5,
இஞ்சி – சிறு துண்டு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.

அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும்.

உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

சூப்பரான கருப்பு உளுந்து அடை ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »