ஆவாரம்பூவின் ஆயுர்வேத நன்மைகள்!
இன்று உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சக்கரை நோய்க்கும் ஆவராம் பூ மருந்தாக உள்ளது.
ஆவாரம் பூ மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து என்று தான் கூற வேண்டும். தலை முடி வளருவதில் இருந்தும் நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம்பூ உதவுகிறது.
“ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ” என்ற பழமொழியில், இருந்து ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களை அறியலாம்.
*சக்கரை நோய்
சக்கரை நோய்க்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவாரம் பூ மிக சிறந்த பலனை தரும். இந்த ஆவாரம் நீரானது சக்கரை நோய் மட்டுமில்லாமல் மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவற்றையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
ஆவாரம்பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
*சகல நோய் நிவாரணி:
ஆவாரை பூ தினம் ஒரு மேஜைக்கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகிவர சர்க்கரை நோய் உடல் சோர்வு, நாவறட்சி, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல்,காந்தல் நீங்கும்.
*தங்கமான நிறம்
ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.
*உடல் பலம் பெற
உடல் பலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புவோர், ஆவாரம் பூவை பாலில் கலந்து குடித்து வரலாம். ஆவாரம் பூ உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.
*மலச்சிக்கல்
மலச்சிக்கல் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. தினமும் இரண்டு முறை மலம் வெளியேறினாலே உடலில் பல நோய்கள் அண்டாது. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் ஆவாரம் பூ தேனீரை பருகுங்கள்.
*தொற்றுக்களுக்கு எதிரி
புதிய ஆவாரம் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுக்களுக்கு எதிரியாக விளங்குகிறது. இதனை சருமத்தின் மீது தடவலாம் அல்லது தேநீராகவும் பருகலாம்.
ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்
*ஆண்டி ஆக்ஸிடண்டுகள்
ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன
*சிறுநீரக பாதை தொற்றுக்கள்
ஆவாரம் பூ தேநீரை பருகுவதால் சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்கள் நீங்கும். இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இரத்தமும் பெருகும்.
*டைப்பாய்டு மற்றும் காலரா
அதீத சக்திகள் கொண்ட ஆவாரம் பூ தேநீரை நீங்கள் தொடர்ந்து பருகுவதால், காலரா மற்றும் டைப்பாய்டு போன்ற நோய்களும், காய்ச்சல்களும் கூட குணமாகும்.
மூலம் குணமடையும் ஆவரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
*ஆவாரம் பூ தேநீர்
காய வைத்த ஆவாரம் பூ அல்லது ஆவாரம் பூ பொடியை நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால், உடல் சூடு,* பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
*கழிவுகளை வெளியேற்றும்
ஆவாரம் பூ தேநீரை தொடர்ந்து பருகுவதால், உடலில் உள்ள நச்சுகள் வியர்வை மூலம் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி குடற்ப்புண், வயிற்று புண் ஆகியவை குணமாகும்.
*பெண்களுக்கு உதவும்
பெண்கள் இந்த ஆவாரம் பூ தேநீரை அருந்துவதால், உடல் வசிகரமாவதுடன், மாதவிடாய் பிரச்சனை, அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் அறவே நீங்கும்.
*ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.
*ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
*உடல்சூடு குறைய:
உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும். ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.