Ingredients for சில்லி நூடுல்ஸ்
- 200 கிராம் நூடுல்ஸ்
- 1 பெரிய வெங்காயம்
- 1 கேரட்
- 1/2 கப் கோஸ்
- 1/2 கப் சிவப்பு குடை மிளகாய்
- 1/2 கப் பச்சை குடை மிளகாய்
- வெள்ளை வெங்காயம் சிறிதளவு
- ஸ்ப்ரிங் ஆனியன் ஒரு கையளவு
- 2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
- 2 மேஜைக்கரண்டி வினிகர்
- 1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லிசாஸ்
- 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
- 2 பல் பூண்டு
- 1 பச்சை மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
How to make சில்லி நூடுல்ஸ்
- முதலில் வெங்காயம், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெள்ளை வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.
- தண்ணீர் சுட்ட பின் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.
- நூடுல்ஸ் 90 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம்.)
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், வெள்ளை வெங்காயம், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
- சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
- அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை கலக்குமாறு பிரட்டி போடவும்.
- நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதை ஒரு bowl ல் வைத்து கெட்சப் உடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி நூடுல்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.