மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும்.
உதடு பெரிதாக உள்ளவர்களுக்கு:
உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாதா:
லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.