20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..! Skin Whitening Tips in Tamil..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Beauty Tips 1:

கசகசா ஒரு டேபிள் ஸ்பூன், துளசி சிறிதளவு, பாசி பயறு சிறிதளவு ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.  பின் இறுதியாக ஒரு ஸ்பூன் தனியாக அரைத்த தக்காளி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இப்பொழுது முகத்தை ரோஸ் வாட்டரை பயன்படுத்தி நன்கு துடைத்து கொள்ளவும். பின் சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள பாசி பயறு பேஸ்ட்டினை முகத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின் 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கரும் திட்டுகள் மறைந்து, முகம் வெள்ளையாக மாற (skin whitening tips in tamil) ஆரம்பிக்கும்.

Beauty Tips 2:

பவுலில் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தக்காளி ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

Beauty Tips 3:

ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் பாசி பயறு மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் 1/2 தக்காளி பழத்தை எடுத்து இந்த மாவில் டிப் செய்து முகத்தில் 3 இருந்து 5 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதினால் சருமம் பொலிவு பெரும்.

Related Posts

Leave a Comment

Translate »