Natural Face Pack – முக அழகை காக்க இயற்கை ஃபேஷியல் !!!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

காய்கறி ஃபேஷியல்:

அழகு குறிப்புகள் 1: கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி மற்றும் பூசணி போன்ற காய்கறிகளை சிறு துண்டு எடுத்து, மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றுடன் கொஞ்சம் பயத்தமாவை கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மேலும் முகத்தில் இருக்கும் பருக்களை போக்கி,  மேடு பள்ளத்தை சரிசெய்யும். மேலும் சருமத்திற்கு ஊட்டசத்தையும், நிறத்தையும் அதிகம் அளிக்கிறது.

வாழைப்பழம் ஃபேஷியல் (Facial At Home):

அழகு குறிப்புகள் 2: வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தயிர் மற்றும் கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் பொலிவுடனும், மென்மையாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்.

மாம்பழ ஃபேஷியல்:

அழகு குறிப்புகள் 3: மாம்பழத்தை நன்றாக மசித்து அவற்றில் சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மேலும் முதுமை தோற்றம் விலகும்.

ஸ்ட்ராபெரி ஃபேஷியல் (Facial At Home):

அழகு குறிப்புகள் 4: ஸ்ட்ராபெரியை தயிருடன் கலந்து, வாரத்தில் இரு முறை முகத்திற்கு ஃபேஷியல் செய்து வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் நீங்கும்.

ஆப்பிள் ஃபேஷியல் (Facial At Home):

அழகு குறிப்புகள் 5: ஆப்பிளை நன்கு அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு ஃபேஷியல்:

அழகு குறிப்புகள் 6: சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால் வறட்சியற்ற சருமத்தையும், இளமையான தோற்றத்தையும் பெறலாம்.

எலுமிச்சை ஃபேஷியல் (Facial At Home):

அழகு குறிப்புகள் 7: எலுமிச்சையில் ஃபேஷியல் செய்தால் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ளலாம்.

மூலிகை ஃபேஷியல் (Facial At Home):

அழகு குறிப்புகள் 8: முல்தானிமட்டி, பயத்தமாவு, கடலை மாவு, கஸ்துரி மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் ஃபேஷியல் (Facial At Home) போட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முறையை தினமும் செய்து வரலாம்.

இந்த முறையை செய்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி, பின்பு கற்றாழை ஜெல்லியில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு முகத்தில் தேய்க்கவும்.

இளநீர் ஃபேஷியல் (Facial At Home):

அழகு குறிப்புகள் 9: சிலருக்கு 25 வயதிலேயே சருமம் சுருக்கம் தோன்றி வயதான தோற்றத்தை தந்துவிடும். எனவே அதற்கு இளநீர் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.

இளநீர் ஃபேஷியல் செய்வதற்கு முன்பு முகத்தை ஒரு முறை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

அதன்பிறகு கடலை மாவு, மைதா மாவு இவற்றுடன் சந்தனம், தேன் மற்றும் இளநீர் ஆகியவற்றை கலந்து முகத்தில் ஃபேஷியல் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை அப்பறம் பாருங்க. உங்கள் முகம் எப்படி ஜொலிக்கிறது என்று.

Related Posts

Leave a Comment

Translate »