உளுந்தங்களி

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உளுந்தங்களி:

பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?

இந்த காலத்தில் டீன் ஏஜ் பெண்குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் கோளாறுகள், கர்ப்பப்பை வீக்கம், வெள்ளைப் படுதல் போன்றவை தென்படுகின்றன.

இவற்றிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் நல்ல உணவுகளை சாப்பிடாமல், துரித உணவுகளையும், கார்பனேட்டட் பானங்களை குடிப்பதாலும், அவை கர்ப்பப்பையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த காலத்தில் இன்று போல் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட இத்தனை வியாதிகள் வந்ததில்லை. உணவுகளும் பத்தியமும்தான் இதற்கு காரணம்.

ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் , உளுந்தங்களியும், முட்டை, நல்லெண்ணையும் தருவது இன்றும் கிராமத்தில் பின்பற்றி வருகிறார்கள்.உளுந்தங்களியில் சேர்க்கப்படும் உளுந்து கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.

அதில் இருக்கும் கால்சியம் இடுப்பு எலும்புகளை பலமாக்குவதால் பிற்காலத்தில் குழந்தை பிறக்கும்போதுபிரச்சனை வராது. அதோடு, வெல்லம் அல்லது கருப்பட்டி ரத்த உற்பத்தியை அதிகரிப்பதால் தேகம் அரோக்கியமாகவும் என்றும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.

இந்த உளுந்தங்களியை பெண் குழந்தைகள் மட்டுமல்ல, பலகீனமாக இருக்கிறவர்களும் சாப்பிடலாம். அதனை தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.

தேவையானவை:

உளுந்து – அரை கப்

பனை வெல்லம் – 2 கப்
(ஆ) கருப்பட்டி-

நல்லெண்ணெய், சுக்கு, ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் உளுந்தை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் அரிசியை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இது தான் களி மாவு. வெல்லத்தை(கருப்பட்டி) பொடித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதி வரும் போது அரைத்த அரிசி, உளுந்து மாவை சிறிது சிறிதாக தூவிக் கொண்டே, கை விடமால் கிளறவும்.

நடு நடுவே நல்லெண்ணெய் விட்டு கட்டி தட்டாது கிளறவேண்டும்.

மாவு சிறிது வெந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, எண்ணெய் சேர்த்து கிளறிவும். பிறகு களி உருண்டு வரும் பதத்தில் இறக்கி ஆறிய பின் உருண்டை பிடித்த்க் கொள்ளுங்கள்.

தினமும் இந்த உருண்டை ஒன்று உண்டு வர வேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »