கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு

 • 500 gms சங்கரா மீன்
 • 5 சின்ன வெங்காயம்
 • 1 தக்காளி
 • 1 கப் துருவிய தேங்காய்
 • 2 பச்சை மிளகாய்
 • 1 மேஜைக்கரண்டி கடுகு
 • 1 மேஜைக்கரண்டி மிளகு
 • 1 மேஜைக்கரண்டி வெந்தயம்
 • 1 மேஜைக்கரண்டி சீரகம்
 • 3 பூண்டு பல்
 • சிறிதளவு புளி
 • 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
 • 2 1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
 • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
 • கருவேப்பிலை சிறிதளவு
 • எண்ணெய் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு

How to make கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு

 • முதலில் மீனை நன்கு கழுவி வைத்து, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தயார் செய்து, தேங்காய்யை துருவி, மற்றும் புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கடுகு, சீரகம், வெந்தயம், மற்றும் மிளகை போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வறுக்கவும்.
 • அடுத்து அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் 3 பல் பூண்டை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
 • அடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
 • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
 • தக்காளி வதங்கியதும் அதில் கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு அரைத்து வைத்திருக்கும் மசாலா, மற்றும் ரெண்டரை மேஜைக்கரண்டி அளவு மல்லி தூள் சேர்த்து சரியாக ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
 • ஒரு நிமிடத்திற்கு பிறகு இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
 • இப்பொழுது மீண்டும் pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் பச்சை மிளகாயை போட்டு வதக்கி பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு கப் அளவு தண்ணீரை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
 • அடுத்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணியை அதனுடன் சேர்த்து நன்கு கிண்டி விட்டு மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
 • குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.
 • 7 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து சிறிதளவு கருவேப்பிலை தூவி பக்குவமாக ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »