குறைந்த நேரத்தில் மிக எளிதாக சமைக்கக் கூடிய ஒரு அட்டகாசமான உணவு வகை.
Ingredients for தக்காளி புலாவ்
- 1 கப் பாசுமதி அரிசி
- 4 தக்காளி
- 1 கை அளவு பச்சை பட்டாணி
- 3 பெரிய வெங்காயம்
- 8 to 10 முந்திரி
- 1 இஞ்சி துண்டு
- 2 பூண்டு பல்
- 1 பச்சை மிளகாய்
- 4 சிவப்பு மிளகாய்
- 1 நட்சத்திர பூ
- 2 ஏலக்காய்
- 2 பட்டை துண்டு
- 3 கிராம்பு
- 1 ஜாதி பத்திரி
- 1 பிரியாணி இலை
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
- 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள்
- 1 கை அளவு கொத்தமல்லி
- 1 கை அளவு புதினா
- நெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
How to make தக்காளி புலாவ்
- முதலில் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி சுமார் 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாயை நறுக்கி, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, புதினா, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி, 2 பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய், 4 சிவப்பு மிளகாய், பாதி பெரிய வெங்காயம் நறுக்கியது, சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு ஒரு மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அதை அரைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.
- நெய் சுட்டதும் அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதி பத்திரி, நட்சத்திர பூ, மற்றும் பிரியாணி இலையைப் போட்டு வதக்கவும்.
- பின்னர் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி நன்கு கிளறி அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- மசாலாவின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
- அடுத்து அதில் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியவுடன் அதில் ஒரு கையளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
- பின்பு ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி இந்த மசாலாவுடன் சேர்த்து அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக கிளறி விடவும்.
- அரிசி மசாலாவுடன் சேர்ந்த பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக விடவும்.
- ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
- சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து தக்காளி புலாவ்வை ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான தக்காளி புலாவ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.