ரசம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான மருத்துவ உணவு. இவை அஜீரணத்திற்கு மற்றும் சளிக்கு மிகவும் உகந்த உணவு. அதனாலேயே ஒரு அதீத விருந்துக்குப் பிறகு கடைசியாக இதை உணவில் சேர்த்து உண்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து விட்டால் வெறும் 15 நிமிடங்களிலேயே இதை வெகு சுலபமாக செய்து விடலாம். மேலும் சமைக்கத் தெரியாதவர்கள் கூட இதை மிக எளிதாக செய்து விடலாம்.
Ingredients for தக்காளி ரசம்
- 4 தக்காளி
- 1/2 மேஜைக்கரண்டி துவரம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை
- 2 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 4 காஞ்ச மிளகாய்
- 4 பல் பூண்டு
- சிறிதளவு வெந்தயம்
- 1 மேஜைக்கரண்டி பெருங்காயம் தூள்
- 1/2 மேஜைக்கரண்டி கடுகு
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- நெல்லிக்காய் சைஸ் புளி
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
How to make தக்காளி ரசம்
- முதலில் தக்காளியை நறுக்கி, பூண்டை தட்டி, மற்றும் புளியைக் கரைத்து புளித் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் துவரம் பருப்பு, வெந்தயம், கொத்தமல்லி விதைகள், ஒரு மேஜைக்கரண்டி அளவு சீரகம், மிளகு, 2 காஞ்ச மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, 2 பல் பூண்டு, மற்றும் கால் மேஜைக்கரண்டி அளவு பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- அது வதங்கியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றி நன்கு அரைத்துக் எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து அதே pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கடுகு, அரை மேஜைக்கரண்டி அளவு சீரகம், 2 காய்ந்த மிளகாய், நாம் தட்டி வைத்திருக்கும் பூண்டு, மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காய தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அது சிறிது வதங்கியவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அதில் மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் நாம் கரைத்து எடுத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை அப்படியே வேக விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் ரச பொடியை தூவி நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் சுமார் இரண்டரை கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.
- ரசம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சிறிதளவு கருவேப்பிலை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை அப்படியே அடுப்பிலேயே விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு ரசத்தை எடுத்து சுட சுட சாதத்திலோ அல்லது டம்ளரிலோ ஊற்றி பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான தக்காளி ரசம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.