பூண்டு நாற்றத்தை கண்டாலே ஓடி ஒளிந்துகொள்பவர்கள் உண்டு. இதன் மருத்துவகுணங்களையும் நாற்றமில்லாமல் ருசியாக எப்படி செய்வது என்பதையும் பார்க்கலாமா?
பூண்டு
பல நூற்றாண்டுகளாக சமையலிலும் சமையலறையிலும் பூண்டை பயன்படுத்தி வருகி றோம். மசாலா மணம் மிக்க பூண்டில் எண்ணிலடங்காக மருத்துவ குணங்கள் நிறைந்தி ருக்கின்றன. அஞ்சறை பெட்டியில் அடங்கியிருக்கும் தனித்துவமான பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்ஸைடு போன்றவை உள்ளடங்கியி ருக்கிறது. பூண்டு சாப்பிடும் போது உடலில் இருக்கும் ஹோமோசிச்டின் என்னும் அமி லத்தை குறைக்க செய்யும். இதனால் இதய பாதிப்பு அண்டாமல் இருக்கும்.
இதில் ஆன் டி பாக்டீரியல், ஆன் டி பங்கல் தன்மை கொண்டது என்பதால் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கவும் செய்யும். பூண்டில் பைட்டோ கெமிக்கல்,வைட்டமின் சி, பி 6 சத்தும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை உள்ளடக்கியது.
உடலில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் இயல்பாகவே அதிகரிக்கிறது. உடல் செரிமானம், வாயு நீக்கி என்று சகல விஷயங்களில் துணைபோகும் பூண்டை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள் என்று இன்றைய மருத்துவர்கள் சொன்னாலும் அன்றே இதை செயல்படுத்தி வந்தவர்கள் நம் முன்னோர்கள்.
ஆய்வுகளும் பூண்டு இதய நோய், புற்றுநோய்களுக்கு எதிராக போராடும் செயல் திற னை கொண்டிருக்கிறது என்று கூறுகிறது.
பூண்டை எப்படி சாப்பிடலாம்
பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது அதிலும் காலை வேளையில் என்று சொல்வார்கள். ஆனால் தினுமும் அப்படி சாப்பிடகூடாது. அப்படி சாப்பிட்டாலும் அதன் தோலை நீக்கி சாப்பிடலாம். குறிப்பாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடும் போது கவனமாக இருக்கவேண்டும். தினமும் பச்சையாக சாப்பிடாமல் மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். வேகவைத்து வறுத்து சுட்டு சாப்பி டலாம்.ஆனால் வறுத்து சாப்பிடும் போது இன்னும் பலன்களும் கிடைக்கிறது.
இரவு நேரத்தில் ஒரு தம்ளர் பாலில் பூண்டின் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் கலந்து வேக வைத்து குடிக்கலாம். தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பூண்டு மாற அதை வறுத்து தயாரித்து தருவது அதிகரித்துவருகிறது. இவை பூண்டின் நாற்றத்தை நீக்கி நாவுக்கு சுவை அளிப்ப தால் யாரும் பூண்டு வெறுப்பதில்லை. இப்படி பூண்டை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாமா?
பூண்டை வறுக்கலாம்
(தேவையான அளவு)பூண்டின் தோலை உரித்து சுத்தம் செய்து வாணலியில் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுங்கள். தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை வறுங்கள். முதலில் பூண்டிலிருந்து நாற்றமடிக்கும் மணம் வெளியேறும். அதை தொடர்ந்து பூண்டில் அலிசின் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.
இதை அப்படியே சாப்பிடலாம். நாற்றமில்லாதது என்பதால் எளிதாக சாப்பிட முடியும். எனினும் சுவை விரும்பிகள் பூண்டை வறுக்கும் போது கால் டீஸ்பூன் வென்ணெய், தேவையான அளவுக்கு மிளகுத்தூள் உப்பு சேர்த்து வறுக்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் வளரும் பருவத்தில் உடலில் அனைத்து சத்துகளையும் நிறைவாக கொண்டுவளர்வார்கள்.
தினமும் 5 பல் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் அதிசயத்தக்க வகையில் உடலின் ஆரோக்கியமும் வேகமாக அதிகரிக்கிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா?
உடலுக்கு தேவையான ஊட்டசத்து
உடலுக்கு மாங்கனீசு சக்தி தேவை. உடலில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட இந்த சத்து அவசியம் தேவை. அன்றாட உடலுக்கு தேவையான மாங்கனீசு சக்தியில் பூண்டில் 3 கிராம் கிடைத்துவிடுகிறது. பூண்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
வைட்டமின் சி சத்து தான் உடலில் இரத்த நாளங்கள். தசைகள், எலும்புகளின் வலுவை உறுதி செய்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் உடலில் நன்மை செய்யும் நொதிகளை தூண்டுகிறது.உடலில் இரும்புசத்து, ஜிங்க் போன்றவை சிறப்பாக இயங்க பூண்டு உதவுகிறது என்பதை உணவு குறித்த வேதியியல் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளரும் பிள்ளைகளுக்கு பூண்டில் சற்று கூடுதலாக வெண்ணெய் சேர்த்து கொடுங்கள். ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும்.
இதயத்தை பாதுகாக்கிறது
வறுத்த பூண்டு உடலுக்கு சென்ற சில மணி நேரத்தில் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பிறகு கெட்ட கொழுப்புகளை கரைத்து அதை வெளியேற்றும் பணிகளில் விரைவாக செயல்படுகிறது. தமனிகளை சுத்தம் செய்து இரத்த அளவை சீராக்க உதவுகிறது. இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் தடைபடாமல் இதயத்துக்கும் உடல் முழுவதும் துடிப்பாக செல்கிறது. இதனால் இதயமும் பாதுகாப்பாக பத்திரமாக இருக்கிறது. பூண்டு இதய நோயை தடுக்கும் என்பது குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன என்றாலும் இதுவரை நடந்த ஆய்வுகள் படி அவை அதிகப்படியான கொழுப்பை கறைக்க உதவுகிறது. இரத்த உறைதலையும் குறைக்கிறது.
புற்றுநோயை தவிர்க்கும்
பூண்டில் இருக்கும் அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றிகள் தவிர அதில் இருக்கும் சல்பர் ஆனது உடலில் கேடுதரும் நஞ்சு மீது பாய்கிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களாக மாறும் நச்சு மீது கலந்து அதை அழிக்கிறது. இதனால் அவை மேலும் வளராமல் தடுக்கப்படுகிறது, அவற்றை முழுமையாக அழித்து வெளியேற்றவும் உதவுகிறது. உடலில் நல்ல செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து அதன் ஆயுளை நீட்டுகிறது.
10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 பற்கள், 40 வயதை அடைந்தவர்கள் தினமும் 6 பற்கள் பூண்டை சாப்பிட்டு வரலாம். இதனால் உடல் வலுபெறும். வாயு ஏற்படாது. வாயு பிரச்சனை உண்டாகாது. உடலில் தேவையற்ற கொழுப்புகளால் உடல் எடை அதிகரிக் காது. கொழுப்பு கட்டியை கரைத்து உடல் எடையையும் குறைக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் வறுத்தபூண்டை மசித்து நாவில் தடவி விடலாம்.
வறுத்த பூண்டால் இவ்வளவு பயன் அதுவும் வாடை இல்லாமல் கிடைக்கும் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பலன் தருகிறதே என்று 6 க்கு மேல் சாப்பிடவும் வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டுக்கும் பொருந்தும்.