முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறுகொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும்.*
*ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும்.*
*கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும்.*
*அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ் வொரு அறைக் குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு நிறமாக இருக்கும்.*
*ஒவ்வொரு விதையிலும் வெண்மை நிற அடையாளம் ஒன்றிருக்கும். இந்த விதைகளே சிதறி முளைக்கிறது.*
*இந்த முடக்கத்தான் முடக்குவாதத்தைப் போக்குகிறது. முடக்கத்தான், முடக்கற்றான், முடக்கு அறுத்தான், இந்திரவல்லி, ஊழிஞை போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதை கிராமத்து மக்கள் கீரையாகப் பயன்படுத்தி பல நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.*
*முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது.*
*பயன்படுத்தும் முறை:*
*இதன் இலைகளை சிறிது எடுத்து துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வர, கை, கால் வலி, மூட்டுவலி தீரும். நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும். தசை நாரும் நரம்பும் வலுப்பெறும்.*
*கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும். முடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை பல மருத்துவகுணங்கள் அடங்கியே ஒரு அற்புதமான கீரை. முடக்கத்தான் கீரையின் தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். இந்த கீரையை எப்படி சமைத்து உண்ணலாம் மற்றும் அதனின் மருத்துவ குணாதிசயங்களையும் கிழே பார்க்கலாம்.*
*துவையல் முடக்கத்தான் கீரை கொண்டு துவையல் செய்யல்லாம். கீரை இலைகளை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி உப்பும்,காய்ந்த மிளகாயும் சேர்த்துத் அரைத்துத் தொடு கூட்டாக துவையல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.*
*பொரியல் கீரையை பொடியாக நறுக்கி, வேகவைத்து அதில் தோலுரித்த சிறிய வெங்காயம் பாதியாக வெட்டி கொஞ்சம் எண்ணையில் வதக்கி பொரியல் செய்தும் சாப்பிடலாம்.*
*ரசம் முடக்கத்தான் கீரை பொடியாக நறுக்கி, கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து சுவையான ரசம் வைக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது.*
*கூட்டு கீரையை பொடியாக நறுக்கி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் மற்ற பருப்புகளுடன் சேர்த்து இந்தக் கீரையில் கூட்டும் செய்யலாம்.*
*மாவை புளிக்க வைக்க அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் முடக்கத்தான் கீரை அரைத்துச் சேர்த்தால். மாவு சீக்கிரம் புளித்து விடும். இந்த கீரையை அடையில் அதிகமா சேர்த்தால், அடை இன்னும் சுவையாக இருக்கும்.*
*மருத்துவ குணங்கள் இந்த கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம் மூல நோய், மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற பல நோய்கள் குணமடையும்.*
*இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் கைகால் வலி, மூட்டுவலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் பறந்து போகும். மூட்டுகளில் தங்கி இருக்கும் புரதம்,யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், மற்றும் கொழுப்புத் திரட்சி படிவங்களை கரைத்து, வலிகளை போக்க வகை செய்யும்.*
*சாறு எடுக்கும் முறை :*
*இஞ்சி சிறய துண்டு, பூண்டு நான்கு பல், சின்ன வெங்காயம் ஒன்று, சீரகம் அரை தேக்கரண்டி, மிளகு அரைத்தேக்கரண்டி இவைகளை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும். பிறகு அதில் இரண்டு குவளை நீர் ஊற்றி முடக்கத்தான் கீரை நன்றாக வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் கீரையின் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா வலிகளும் கரைந்து வலி இருந்த சுவடே இல்லாமல் மறைந்து விடும். நாற்பது வயது தொடங்கியவர்கள் இந்த முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் இந்த கீரை குணப்படுத்தும்.*
*முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து கொஞ்சம் நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.*
*இந்தக் கீரையை அரைத்து அதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் மேல் இந்த கீரையை வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும். வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை நீங்கும்.*
*மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிக்க நல்லது. இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும் பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு போக்கும்.*
*இந்தக் கீரையை அரைத்து அடிவயிற்றில் கட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும்.*
*இந்த கீரையை சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம் இந்த கீரையால் நலம் பெறலாம்.*
*மூட்டு வாதமா? முடக்கற்றான் கீரையை சாப்பிடுங்கள். இது பலருக்கு தெரிந்த மூட்டு வாத அறிவுரை. பெயருக்கேற்ற செயல்பாடு உடையது முடக்கற்றான் (முடக்கு + அறுத்தான்) பழங்காலத்திலிருந்து மூட்டுவலி, மூட்டு பாதிப்புகளுக்கு கைமருந்தாக பயன்பட்டு வருகிறது.*
*சித்த வைத்தியத்திலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும்.*
*செடியின் வேர், இலை செடி முழுவதும் மருத்துவ பயன்களுடையவை.மூட்டுவாதம், மூட்டுவலி (ஆர்த்தரைடீஸ், ருமாடிஸம்) இவற்றுக்கு முடக்கற்றான் மூலிகையின் முக்கிய பயன், நோயால் முடங்கிப்போன முட்டிகளை மீண்டும் இயங்க வைக்கும்.*
*கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கெல்லாம் முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.*
*இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.*
*இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும்.*
*இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.*
*இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.*
*முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.*
*ஒரே இலையில் இத்தனை பயன்களா என்று வியப்பாக இருக்கிறதா, வியப்பதோடு நிறுத்தி விடாதீர்கள் அதன் பயனை அனுபவியுங்கள்.*