* பனிக்காலங்களில் நம் உடலில் ஏற்படும் வளர்ச்சியை போக்க ஆவாரம்பூ மிகுந்த அளவில் உதவி புரிகின்றது. இந்த பூவுடன் வெள்ளரியின் விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலுக்கு தேய்க்கலாம். இதே போல் கோடை சமயங்களில் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும் முகத்திற்கும் தடவலாம்.
* பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, ஆகிய மூன்றையும் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து உங்கள் முகத்திற்கு போட்டு வந்தால் முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.
* முடிக் கொட்டுவதை தடுக்கவும் ஆவாரம்பூ மிகச்சிறந்த பணிபுரிகிறது. செம்பருத்தி, தேங்காய்ப் பால் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். கூந்தலும் நன்கு வளர்ச்சி அடைய செய்யும்.
* வடிக்கட்டி இருக்கும் ஆவாரம் பூவின் தண்ணீரை வைத்து உங்கள் கூந்தலை அலசலாம். முகத்தையம் கழுவலாம், இதை தொடர்ந்து செய்தால் முடி சுத்தமாவதுமட்டுமில்லாமல், முகமும் பளிச்சென்று இருக்க செய்யும். உடலின் நிறம் கூட செய்யும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
* உங்களுக்கு தேவையான அளவு ஆவாரம் பூ எடுத்துக்கொள்ளுங்கள். அதை அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சுண்ட காய்ச்சி, அதனுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தினமும் முடிக்கு தடவிவரலாம். இதை தொடர்ந்து செய்தால் முடி நன்கு வளர செய்யும், அதுமட்டுமில்லாமல் முடி கொட்டுவது நின்று விடும்.