பற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பற்களில் இருக்கும் கறைகளை போக்க எளிமையான வழிகள் உங்களுக்காக!

* உப்பு பற்களில் உள்ள கறைகளை போக்க மிகச்சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகின்றது. தினமும் நாம் பல் துவக்குவதற்கு முன் உப்பு தூளை வைத்து பல் துலக்க வேண்டும். பின்பு பேஸ்ட் கொண்டு துலக்கிக் கொள்ளலாம். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும்.

* இரவு உணவு உண்ட பின் தூங்க செல்வதற்கு முன்ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து நன்றாக பற்களை தேய்க்கலாம். இதை தேய்த்த பின்பு மற்ற உணவை சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலையில்எழுந்து வாயை கொப்பளித்து கொள்ளலாம். இரவு முழுவதும் ஆரஞ்சு பழத்தோல் பற்களில் படர்ந்திருப்பதால் கறையை போக்குவது மட்டுமில்லாமல், கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது.

* ஸ்ட்ராபெர்ரி பழம் இரண்டை எடுத்துக் கொண்டு அதை அரைத்து தினமும் பற்களுக்கு தேய்த்து வரவேண்டும். ஒரு 15 நிமிடம் கழித்து பற்களை கழுவிக் கொள்ளலாம். இதே போல தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்

* பற்களை சுத்தமாக மாற்றுவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் தருவதிலும் ஆப்பிள் சிறப்பான பங்கு அளிக்கிறது. எனவே உணவை உண்டபின் ஒருமணி நேரம் கழித்து ஆப்பிள் சில துண்டுகள் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும்.

* கொய்யா இலை மற்றும் கொய்யாப்பழங்கள் பற்களில் இருக்கும் கறையைப் போக்க கிடைக்கும் எளிமையான செலவிடாத ஒரு மருந்தாகும். கொய்யா இலையை சுத்தமாக கழுவி நீரில் கொதிக்க வைத்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் கறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் போய்விடும்.

* 1 ஸ்பூன் கிராம்புத் தூளுடன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, பற்களில் கறை உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு வாய் கொப்பளிக்கலாம். இதை தினமும் செய்வதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பற்களை நீங்கள் பெறலாம்.

Related Posts

Leave a Comment

Translate »